தேர்தல் ஆணையம்

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளுக்கு தேர்தல் மேலாண்மைக்கான திறன் மேம்பாட்டு 12 நாள் பயிற்சி முகாமுக்கு, ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனம் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

Posted On: 08 MAR 2018 3:56PM by PIB Chennai

இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் தேர்தல் மேலாண்மைக்கான திறன் மேம்பாடு என்னும் பயிற்சி முகாமை ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனம் நடத்துகிறது. 2018 மார்ச் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி முடிய நடைபெறும் இந்த முகாமில் 21 நாடுகளைச் சேர்ந்த  29 தேர்தல் மேலாண்மை வாரியத்தின் மூத்த மற்றும் நடுத்தர வகை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


(Release ID: 1523385) Visitor Counter : 131
Read this release in: English