உள்துறை அமைச்சகம்

அந்நிய நன்கொடை (வரன்முறை) சட்ட்த்தில் திருத்தம்

Posted On: 07 MAR 2018 4:44PM by PIB Chennai

எஃப்.சி.ஆர்.. 1976 பகுதி 2ன் பிரிவு (சி)யின் கீழ் விளக்கப்பட்டிருப்பது போல் எந்த அரசியல் கட்சியும் எந்த அந்நிய ஆதாரங்களில் இருந்து நன்கொடை பெறமுடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1954 பிரிவு 29 பி-யும் அரசியல் கட்சிகள் அந்நிய நன்கொடைகள் பெறுவதை தடை செய்கிறது.

நிதி மசோதா 2018-ன் பிரிவு 217, அந்நிய நன்கொடை (வரன்முறை) சட்டம் 2010ன் பகுதி 2 துணைப் பகுதி (1), விதி (i)ன் துணை விதி (vi)ல் செய்யப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக நிதிச் சட்டம் 2016ல் திருத்தம் செய்ய கோருகிறது.

மேற்கூறப்பட்ட திருத்தத்தை அந்நிய நன்கொடை (வரன்முறை) சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட 1976 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் திரும்ப பெறப்பட்டு அந்நிய நன்கொடை (வரன்முறை) சட்டம் 2010 என மீண்டும் கொண்டு வரப்பட்ட்து.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. கிரண் ரிஜுஜு குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1523231) Visitor Counter : 211


Read this release in: English