மத்திய அமைச்சரவை

தாமன் மற்றும் டியூ நகராட்சிகள் திருத்த நடைமுறைகள் 2018, தாத்ரா, நாகர் ஹவேலி நகராட்சி மன்றங்கள் திருத்த நடைமுறைகள் 2018, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மாநகராட்சி திருத்த நடைமுறைகள் 2018 ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2018 7:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்க்கண்ட நடைமுறைகள் அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது.

  1. தாமன் மற்றும் டியூ நகராட்சிகள் திருத்த நடைமுறைகள் 2018,
  2. தாத்ரா, நாகர் ஹவேலி நகராட்சி மன்றங்கள் திருத்த நடைமுறைகள்
  3. 2018, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மாநகராட்சி திருத்த நடைமுறைகள் 2018

தாக்கம் :

தாமன் டியூ, தாத்ரா, நாகர் ஹவேலி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள நகராட்சிகளில் அமைப்பு, நிர்வாகம், அதிகாரங்கள் ஆகியவற்றை மேலும் சிறப்பாக அமைப்பதற்கு இது உதவும்.

விவரங்கள்:

  1. கட்சித்தாவல் தடை, ஆக்கப்பூர்வமான நம்பிக்கையில்லா தீர்மானம், மத்தியஸ்த அமைப்பை உருவாக்குதல் போன்ற பிரிவுகள் 1968 தாமன் டியூ நகராட்சி நெறிமுறைகள், 2004 தாத்ரா நாகர் ஹவேலி நகராட்சி சபைகள் நெறிமுறைகள், 1994 அந்தமான் நிக்கோபார் தீவுகள் நகராட்சி நெறிமுறைகள் ஆகியவற்றில் இணைக்கப்படும்.

இந்த நடைமுறைகளில் கீழ்க்கண்ட திருத்தங்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.

  1. காலனி ஆதிக்க காலத்தை நினைவுறுத்தும் வார்த்தையான சர்வன்ட் என்பதற்கு பதிலாக எம்ப்ளாயி என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
  2. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்களிக்க வகை செய்தல்
  3. 1965-ஆம் ஆண்டு மத்திய குடிமைப்பணி விதிகளை தண்டனை நடவடிக்கைகளுக்கு பொருந்தச் செய்தல்
  4. பல ஆண்டுகளுக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகைகளை மாற்றியமைத்தல்

---


(வெளியீட்டு அடையாள எண்: 1523126) வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க: English