நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கான வசதிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2018 3:11PM by PIB Chennai

சுரங்க ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பின்வரும் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1. வீட்டு வசதி, குடிநீர், இந்திய நிலக்கரி நிறுவன சுரங்கங்களின் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சுகாதார வசதிகள்.

2. ஊழியர்களின் பணிக்கு தேவையான வகையில் அனைத்து ஊழியர்களுக்கும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்.

3. இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவ்வப்போது மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. தேசிய பாதுகாப்பு மாநாட்டின் பரிந்துரைகளின்படி மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறது.

4. பூர்வாங்க மற்றும் புத்தாக்க பயிற்சிகள் உள்ளிட்ட தேவையான பயிற்சிகள். சட்ட வரைமுறைபடியான பணிப் பயிற்சி.

5. தரைக்கு அடியிலான சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் நீண்ட தொலைவு செல்லத் தேவைப்படும் சவாரி வசதி.

6. சுரங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டப்பூர்வ பணியாளர்களின் 24 மணி நேர மேற்பார்வை.

7. அவசர காலங்களில் தேவைப்படும் சுரங்க மீட்பு சேவைகளுக்கான முழு ஆயத்தமான அமைப்பு.

மக்களவையில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இத்தகவல் வெளியானது.

கூடுதல் விவரங்களுக்கு : www.pib.nic.in இணையத் தளத்தைக் காணவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1523110) வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க: English