நிதி அமைச்சகம்
நேரடி பணமாற்றத் திட்டத்தின் பயனாளிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2018 6:07PM by PIB Chennai
நேரடி பயன் மாற்றத் திட்டம் நாடு முழுவதும் 12.12.2014 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 15.2.2018 வரை, இத்தகைய 366 திட்டங்களின் வாயிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் மாற்றப்படுகிறது. 15.2.2018 வரை ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 113 கோடி பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பகல் திட்டத்தின் கீழ் 19.88 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது முதல் ரூ.68020.35 கோடி சமையல் எரிவாயு நுகர்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு : www.pib.nic.in இணைய தளத்தைக் காணவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1523007)
வருகையாளர் எண்ணிக்கை : 97