மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஆலோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது

Posted On: 05 MAR 2018 5:53PM by PIB Chennai

மாணாக்கரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது. பள்ளிகளின் பாடத்திட்டத்தை நியாயப்படுத்தி மாற்றி அமைப்பதற்கு அவசர அவசியம் உள்ளது என்று தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், கல்வியின் நோக்கம் கல்வி முறையின் மூலம் நல்ல மனிதர்களை தயார் செய்வது ஆகும் என்று கூறினார். ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவ கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியனவும் அவசியம். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் இந்தப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

 

ஆலோசனை கூற விரும்புவர்கள் 2018 மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் 2018 ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை தங்களது ஆலோசனைகளை : http://164.100.78.75/DIGI என்ற முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கென நிறுவப்பட்டுள்ள படிவத்தில் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை சுருக்கமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆலோசனைகள் தெரிவிப்போர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றின் பாடத்திட்ட ஆவணங்கள் கீழ்கண்ட இணையதளத்தில் கிடைக்கின்றன.

http://www.cbseacademic.nic.in/curriculum.html

http://www.ncert.nic.in/rightside/links/syllabus.html

சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டி ஆகியவை வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான பல்வேறு பாடங்கள் சம்பந்தப்பட்ட பொருளடக்கத்தை சமநிலை கொண்டதாக மாற்றியமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

                                ----



(Release ID: 1522883) Visitor Counter : 166


Read this release in: English