சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே பாதைகளில் மரங்கள் நடப்படும்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2018 6:11PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும், ரயில் பாதைகளுக்கு அருகில் உள்ள நிலங்களிலும் மரம் நடும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சாலைகளின் இருமருங்கிலும், ரயில்வே பாதைகளிலும், ஆறுகள், நீரோடைகள், கால்வாய்களின் பக்கங்களிலும் சமூக வனத்திட்டத்தின் கீழ் மரங்களை நடுவதை தேசிய வனக்கொள்கை 1988 ஊக்குவிக்கிறது. வனக்கொள்கைகளுக்கு ஏற்ப ரயில்வே மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் ரயில்வே பாதைகளுக்கு அருகில் உள்ள காலியிடங்களிலும் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய மாநில வனத்துறைகளுக்கு அமைச்சகம் வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைகளின் இருமருங்களிலும் மற்றும் ரயில்வே காலியிடங்களிலும் மரம் நடுவதற்கான விதிமுறைகளையும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் வழங்கிய தகவலின்படி ரயில்வே நிலங்களில் மரம் நடுவது அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வனமயமாக்குதல் திட்டப்படி, 41,417 ஹெக்டேர் ரயில்வே நிலத்தில் மரங்கள் நடப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வெளியீட்டு அடையாள எண்: 1522843)
வருகையாளர் எண்ணிக்கை : 180