சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள்

Posted On: 05 MAR 2018 6:13PM by PIB Chennai

இந்தியா தனது 2005 ஆம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 முதல் 25 சதவீத அளவுக்கு, 2020 ஆம் ஆண்டு வாக்கில் கார்பன் உமிழ்வு அடர்த்தியை குறைத்துக் கொள்ள தானாகவே முன்வந்து இலக்கை அறிவித்தது. பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா கட்டமைப்பு மாநாட்டில் குறிப்பிடப்பட்ட 8 இலக்குகளை 2021 முதல் 2030-க்குள் அடைவதற்கான உறுதி அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது.

இந்த இலக்குகளை எட்டும் வகையில், பல்வேறு அமைச்சகங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் 8 தேசிய இயக்கங்களை உள்ளடக்கிய பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்திற்கு ஏற்ப, மாநில செயல் திட்டங்களை 32 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வகுத்துள்ளன.

2018-19 ஆம் நிதியாண்டில் சுற்றுச்சூழல்,  வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் பருவநிலை மாற்றப் பிரிவுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல்,  வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.pib.nic.in இணையத்தளத்தை காணவும்.



(Release ID: 1522799) Visitor Counter : 217


Read this release in: English