பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதப்படையில் விமானிகள் நியமனம்

Posted On: 05 MAR 2018 3:03PM by PIB Chennai

இந்திய விமானப் படையில் விமானியாக சேருவதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன. (NDA, CDSE, AFCAT மற்றும் NCC சிறப்பு நுழைவு). என்.டி.ஏ மற்றும் சி.டி.எஸ்.இ-வுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமும், ஏ.எப்.சி.ஏ.டி-க்கு விமானப்படை தேர்வு மூலமும், தேர்வாகி பின்னர் எஸ்.எஸ்.பி சோதனை மூலம் தெரிவு செய்யப்படுவர். தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள் சிறப்பு நுழைவுக்கு விமானப்பிரிவின் சிறப்பு சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் நேரடியாக எஸ்எஸ்.பி சோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் டாக்டர். சுபாஷ் பாம்ரே எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவல் தரப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.


(Release ID: 1522797) Visitor Counter : 139
Read this release in: English