நீர்வளத் துறை அமைச்சகம்
கங்கை நதியை தூய்மைப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2018 5:26PM by PIB Chennai
கங்கை நதியின் கரைகளில் உள்ள கட்டடங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சிகள் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
நமாமி கங்கை திட்டத்தின் கீழ், கங்கோத்ரியிலிருந்து மேற்கு வங்கம் வரை கங்கை நதி நீரின் தரத்தை கண்காணிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது. மேலும், மேற்கொள்ளப்பட்ட நதி நீர் தரக் கண்காணிப்பின்படி, 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டில் கங்கை நதி நீரின் தரம் மேம்பட்டிருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுஉருவாக்கத்துறை இணையமைச்சர் டாக்டர் சத்திய பால் சிங் இதனைத் தெரிவித்தார்.
கூடுதல் விவரங்களுக்கு: www.pib.nic.in இணையத் தளத்தைக் காணவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1522796)
வருகையாளர் எண்ணிக்கை : 75