தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கிராமப்புற ஊதியங்கள்

Posted On: 05 MAR 2018 5:25PM by PIB Chennai

20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ள 600 கிராமங்களில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.)  மேற்கொண்ட ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் பொது வேளாண் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் அல்லாத தொழிலாளர்களின் சராசரி தினசரி ஊதிய விகிதங்களை கிராமப்புற தொழிலாளர் விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலாளர் அமைப்பு தொகுத்து வருகிறது.

பொது வேளாண் தொழிலாளர்களின் வருடாந்திர சராசரி தினக் கூலி விகிதங்கள் கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு ரூ. 233.84 என இருந்த இது 2016ம் ஆண்டு ரூ. 248.32 ஆகவும், 2017ம் ஆண்டில் ரூ. 263.59 ஆகவும் அதிகரித்துள்ளது. வேளாண் அல்லாத தொழிலாளர்களைப் பொருத்தவரை இது 2015ம் ஆண்டு இருந்த ரூ. 246.82 என்ற அளவில் இருந்து 2016ம் ஆண்டு ரூ. 257.95 ஆகவும், 2017ம் ஆண்டு ரூ. 270.76 ஆகவும் அதிகரித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948ன் கீழ் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் மற்றும் திருத்தியமைத்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி சட்டம் 2005ன் கீழ் தொழிலாளர்களுக்கான ஊதியம் திருத்தி அமைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. சுரேஷ் குமார் கங்குவார் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இந்த்த் தகவல் உள்ளது.

 

****


(Release ID: 1522792)
Read this release in: English