தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர்கள் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2018 5:27PM by PIB Chennai

அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பதினான்கு வயது நிறைவுபெற்றவராக இருக்க வேண்டும் தாம் அமைப்புசாரா துறையில் பணிபுரிவதை அந்தத் தொழிலாளர் சுயமாக முன்வந்து உறுதிப்படுத்த வேண்டும் என்ற  நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு அமைப்புசாரா தொழிலாளரும் பதிவு செய்து கொள்வதற்கு தகுதியானவர் என அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம் 2008-ன் 10-ம்பிரிவு கூறுகிறது. பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட வேண்டும்.

அமைப்புசாராத் தொழிலாளர் அடையாள எண் என்ற சிறப்பு அடையாள எண் அளிக்கப்படுவதற்கு வசதியேற்படுத்தும் வகையில் தேசிய மேடை ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதுடன் இதனை 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த ரூ. 402.7 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

கீழ்க்காண்பவற்றைக் உள்ளடக்கிய சமூக பாதுகாப்பின் கீழ் அமைப்புசார துறையில் உள்ள பணியாளர்களை சேர்க்க அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

பிரீமியத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே 50:50 விகித்த்தில் பங்கு கொண்ட பிரதமர் ஜீவன் ஜோதி  பீமா திட்டம்/ பிரதமர் சுரக்‌ஷா பீமா திட்டம்.

தேசிய சுகாதார முன்னோக்கு திட்டம்

தேசிய குடும்ப பயன் திட்டம்

இந்திரா காந்தி தேசிய வயதானோர் ஓயூவூதிய திட்டம்

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்குவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்த்த் தகவல் உள்ளது.

 

****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1522791) வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க: English