சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்சலைட் பாதித்த பகுதிகளில் சாலை அமைப்பு
प्रविष्टि तिथि:
05 MAR 2018 5:13PM by PIB Chennai
எட்டு மாநிலங்களில் ரூ.7,300 கோடி மதிப்பீட்டில் 5,477 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2009ஆம் ஆண்டு சாலைத் தேவை திட்டம் ஒன்றின் கீழ் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திரப்பிரதேசம், பீகார், சத்தீஷ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேஷ், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்திரப்பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நாட்டின் இதரப்பகுதிகள், அண்டை மாநிலங்கள், அதே மாநிலத்தில் மேம்பாடு அடைந்த பகுதிகள் ஆகியவற்றை இணைப்பதற்கான சாலைகள் உருவாக்கப்படும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கப்பல் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ரசாயனப்பொருட்கள், உரத்துறை இணையமைச்சர் திரு மான்சுக் எல் மன்டாவியா இத்தகவலை தெரிவித்தார்.
----
(रिलीज़ आईडी: 1522655)
आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English