பாதுகாப்பு அமைச்சகம்
தனுஷ் ரக துப்பாக்கிகளுக்கு போலி சீனப் பாகங்கள் விநியோகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2018 3:00PM by PIB Chennai
மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்s துப்பாக்கித் தொழிற்சாலை கொள்முதல் செய்துள்ள "6 ஒயர் ரேஸ் ரோலர் பேரிங்' என்ற ஓர் உதிரி பாகம் குறித்து பெயர் குறிப்பிடாதவரிடமிருந்து புகார் வந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார்.
அந்த உதிரி பாகம் தில்லியில் உள்ள சித் சேல்ஸ் சிண்டிகேட் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த உதிரி பாகம் “155 மிமீ X 45 திறன்” கொண்ட தனுஷ் துப்பாக்கியில் பொருத்துவதற்காகத் தருவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆர்டரில் இந்த உதிரி பாகங்கள் ஜெர்மனியில் உள்ள சிஆர்பி என்ற நிறுவனத்திடமிருந்து பெறப்பட வேண்டும். இது குறித்து நடத்தப்பட்ட பூர்வாங்க விசாரணையில் அந்தக் குறிப்பிட்ட உதிரி பாகத்தை தில்லியில் உள்ள சித் சேல்ஸ் சிண்டிகேட் நிறுவனம் சீன நிறுவனத்திடமிருந்து தருவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அந்த உதிரி பாகத்தின் தரத்தைப் பற்றிய எவ்வித புகாரும் வரவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக தலைமை கண்காணிப்பு அலுவலர் (Chief Vigilance Officer) பரிந்துரைத்தபடி ஆயுதத் தொழிற்சாலை வாரியம் (OFB) மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) பொருளாதாரப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள சித் சேல்ஸ் சிண்டிகேட் நிறுவனத்துடனான வணிக உறவை ஆயுதத் தொழிற்சாலை வாரியம் ரத்து செய்துவிட்டது.
இத்தகவல்களை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே திரு. சி.எம். ரமேஷின் கேள்விக்கு மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1522644)
வருகையாளர் எண்ணிக்கை : 122