பாதுகாப்பு அமைச்சகம்
இரண்டு மாத காலப் போர்ப் பயிற்சியை இந்தியக் கடற்படை நிறைவு செய்தது
Posted On:
05 MAR 2018 4:50PM by PIB Chennai
இந்தியக் கடற்படை தனது இரண்டு மாத காலக் கடுமையான போர்ப் பயிற்சியை 2018 பிப்ரவரி 28-ந்தேதி நிறைவு செய்தது. இந்த விரிவான போர்ப் பயிற்சியில் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் பங்கேற்றன. போர்க் கருவிகள், விமானப்படையின் அனைத்து விதமான விமானங்கள், கடலோர காவல்படையின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியில் இராணுவ வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவின் இரண்டு கடல் படுகைகளிலும் நடத்தப்பட்ட இந்தப் போர்ப் பயிற்சி குஜராத் கடற்கரைக்கப்பால் வடக்கு அரபிக்கடல் முதல் இந்தோனேஷியாவுக்கு அருகே சுந்தா நீர் இணைக்கு அருகே தெற்கு இந்தியப் பெருங்கடல் வரை பரவியிருந்தது. கிழக்குச் கடற்படுகையில் நடைபெற்ற போர்பயிற்சிக்கு என்கோர் எனப் பெயரிடப்பட்டிருந்தது. மேற்குக் கடற்பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்கு பாஸ்சிம் லேகர் பயிற்சி எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்தியக் கப்பற்படை இரண்டு கடல்படுகைகளிலும் போர்ப் பயிற்சி நடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்த இரண்டு போர் முனையங்களிலும் உணரப்பட்ட அச்சுறுத்தல் நிலவரம் காரணமாக கடற்படை இதனை மேற்கொண்டது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
----
(Release ID: 1522615)
Visitor Counter : 230