பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கேபினட் பணி நியமனக் குழுவின் பணி நியமனங்கள்

Posted On: 01 MAR 2018 1:24PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையின் பணிநியமனக் குழு கீழ்க்கண்ட பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

  1. திரு. தருண் ஸ்ரீதர் இஆப (இந்திய ஆட்சிப் பணி ஹிமாசலப் பிரதேசம் 1984ம் ஆண்டு அணி) கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் செயலாளராக நியமனம்.
  2. உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலராக உள்ள திரு. பிரிஜ் ராஜ் சர்மா இஆப (ஜம்மு காஷ்மீர் 1984 அணி) எல்லைப் பராமரிப்பு தனிச் செயலராக நியமனம்.
  3. உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலராக உள்ள திரு. ஜெய்தீப் கோவிந்த் இஆப ((மத்தியப் பிரதேசம் 1984 அணி) ஊரக வளர்ச்சித் துறை தனிச் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக மாறுதல்.
  4. உயர்கல்வித் துறை தனிச்செயலர் திரு. சுப்பிரமணியம் இஆப (ஆந்திரப் பிரதேசம் 1985வது அணி) அதே துறையின் செயலராக நியமனம். செயலர் கே.கே. சர்மா இஆப (யூனியன் பிரதேசம் 1983 அணி) கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஓய்வு பெற்றார்.
  5. தற்போது கேபினட் செயலகத்தில் (ஒருங்கிணைப்பு) கூடுதல் செயலாளராக இருக்கும் திரு. இந்தர்ஜித் சிங் இஆப (கேரள 1985 அணி) கேபினட் செயலக ஒருங்கிணைப்பில் நியமனம்.
  6. திரு. ராகவேந்திர ராவ் இஆப (ஹரியானா 1985வது அணி) ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையில் செயலராக நியமனம்
  7. வேளாண்துறை மற்றும் கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை சிறப்புச் செயலராக இருக்கும் திரு. சுரேந்திரநாத் திரிபாதி இஆப (ஒடிசா 1985வது அணி) நாடாளுமன்ற விவகாரத் துறையில் செயலராக நியமனம்
  8. திரு. அனில் கோபிசங்கர் முகிம் இஆப (குஜராத் 1985வது அணி) சுரங்கத் துறையில் செயலராக நியமனம். இப்பதவியில் இருந்த திரு. அஜய் மிட்டல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
  9. திரு. சந்திரமவுலி இஆப (தமிழ்நாடு 1985) பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் செயலராக நியமனம். இப்பதவியில் இருந்த திரு. அஜய் மிட்டல் (ஹரியானா 1982) 2018, பிப்ரவரி 28ம் தேதி ஓய்வு பெற்றார்.
  10.    தொழில் கொள்கை மற்றும் தொழில்மேம்பாட்டுத் துறையின் தனிச் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக இருக்கும் திரு. எஸ்.சி. பாண்டே IA&AS (இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் பணி 1983வது அணி) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தனிச் செயலராகப் பதவி உயர்வு  பெற்று அத்துறையின் தனிச் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம்.
  11. மின்சாரத் துறையில் கூடுதல் செயலராக இருக்கும் திருமதி ஷாலினி பிரசாத் இஆப (உத்தரப் பிரதேசம் 1985வது அணி) பஞ்சாயத்து ராஜ்ய அமைச்சகத்தின் இணைச் செயலர் பதவி தற்காலிகமாக உயர்த்தப்பட்டு, கூடுதல் செயலாளராக நியமனம்.
  12. மருந்துகள் விலை நிர்ணய தேசிய ஆணையகத்தின் தலைவராக உள்ள திரு. பூபேந்திர சிங் இஆப (உத்தரப் பிரதேசம் 1985) கேபினட் செயலகத்தில் கூடுதல் செயலர் அந்தஸ்தில் ரசாயன ஆயுதங்கள் மாநாட்டு தேசிய ஆணையகத்தின் தலைவராக நியமனம்.
  13. தேசிய மின்ஆளுகைப் பிரிவு (National e-Govemance Division) முதன்மைச் செயல் அலுவலராக இருக்கும் திரு. சஞ்சீவ் குப்தா இஆப (ஹரியானா 1985) மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தில் (Inter-State Council Secretariat) கூடுதல் செயலராக நியமனம்.
  14. உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலராக இருக்கும் திரு. சத்பால் சவுகான் இந்தியப் பொறியியல் பணி (IES 1983 அணி) உள்துறை அமைச்சக கூடுதல் செயலாலராக நியமனம்.
  15. பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் இணைச் செயலராகவும் நிதி ஆலோசகராகவும் உள்ள திருமதி கார்கி கவுல் IA&AS (இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் பணி 1984வது அணி) அதே பதவி நிலை உயர்த்தப்பட்டு நியமனம்.
  16. சட்ட விவகாரத் துறை, மத்திய  ஏஜென்சி பிரிவில் இணைச் செயலராக (பொறுப்பு) உள்ள திரு. அனில் குலாத்தி ஐஆர்பிஎஸ் (இந்திய ரயில்வே பணியாளர் நலன் சேவை 1984வது அணி) அந்தப் பதவி நிலை தற்காலிகமாக உயர்த்தப்படுவதை அடுத்து அதே துறையில் கூடுதல் செயலராக நியமனம்.
  17. மத்திய பண்பாட்டுத் துறையில் இணைச் செயலராக இருக்கும் திருமதி ஷீஃபாலி ஷா இந்திய வருவாய்ப்பணி (தகவல் தொழில்நுட்பம் IRS – IT 1985வது அணி) பண்பாட்டு அமைச்சகத்தின் பதவி தற்காலிகமாக நிலை உயர்த்தப்பட்ட கூடுதல் செயலர் பதவியில் நியமனம்.
  18. மத்திய வணிகத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலராக உள்ள திரு சஞ்சய் சத்தா (இந்திய ரயில்வே பணி - இயந்திரப் பொறியியல். 1985வது அணி) வணிகத் துறை அமைச்சகத்தில் தற்காலிகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட கூடுதல் செயலர் பதவியில் நியமனம்.
  19. திரு. சுபாஷ்சந்திரா இஆப (கர்நாடகம் 1986அணி) பாதுகாப்பு உற்பத்தித் துறையில் கூடுதல் செயலராக நியமனம்.
  20. உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக இருக்கும் திரு. பிபின் பிஹாரி மல்லிக் இஆப (மகாராஷ்டிரம் 1986) பண்பாட்டு அமைச்சகத்தில் தற்போது காலியாக உள்ள இணைச் செயலர் பணி நிலை உயர்த்தப்பட்டு, அதில் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம்.
  21. திரு. ஷம்பு சிங் இஆப (மணிப்பூர் 1986) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம்.
  22. பேரிடர் மேலாண்மை தேசிய ஆணையகத்தில் ஆலோசகராக உள்ள திரு. பிம்பாதர் பிரதான் இஆப (பிஹார் 1987) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறையில் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம்.
  23. திரு. தேவசிஷ் பாண்டே இஆப (.பி. 1987) மத்திய நிதிச்சேவைகள் துறையில் கூடுதல்  செயலராக நியமனம்.
  24. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக இருக்கும் திருமதி லீனா நந்தன் (.பி. 1987) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலராக நியமனம்.
  25. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணைச் செயலராக உள்ள திரு. பி. ஆனந்த் இஆப (தமிழ்நாடு 1987) பயோடெக்னாலஜி துறை மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தில் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம்.
  26. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை கூடுதல் செயலர் திரு. ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா இஆப (தெலுங்கானா 1987) தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநராக நியமனம்.
  27. திரு. பங்கஜ் குமார் இஆப (நாகாலாந்து 1987) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் செயலராக நியமனம்.
  28. பொருளாதார விவகாரத் துறை இணைச் செயலர் திரு. ப்ரவீண் கர்க் இஆப (மத்தியப் பிரதேசம் 1987) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தில் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமனம்.
  29. திரு. பித்யுத் பிஹாரி ஸ்வைன் இஆப (குஜராத் 1988) வணிகத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக நியமனம்.
  30. மத்திய செயலகப் பணியில் (CSS) சுகாதார ஆய்வுத் துறை இணைச் செயலராக உள்ள திருமதி சரிதா மிட்டல் அப்பதவி நிலை உயர்த்தப்படுவதை அடுத்து கூடுதல் செயலராக நியமனம்.

 

மத்திய கீழ்க்கண்ட அலுவலர்கள் பதவி உயர்த்தப்பட்டு அதே பொறுப்பில் நீடிக்க அமைச்சரவையின் பணிநியமனக் குழு கீழ்க்கண்ட ஒப்புதல் அளித்துள்ளது:

(i) வணிகவியல் துறை கூடுதல் செயலராக உள்ள திரு. அனுப் வத்வான் இஆப (உத்தரகண்ட் 1985) அவரது  பதவி தற்காலிகமாக உயர்த்தப்பட்டு தனிச் செயலராக நியமனம்.

  1. பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலர் திரு. எம்.எம். குட்டி இஆப (யூனியன் பிரதேசம் 1985) அப்பதவி தற்காலிகமாக உயர்த்தப்பட்டு அதே துறையின் தனிச் செயலராக நியமனம்

(iii) சிறு விவசாயிகள் வேளாண் தொழில் கூட்டமைப்பு (Small Farmers' Agri-business Consortium - SFAC) மேலாண் இயக்குநர் திரு. சுமந்த சவுத்ரி (மேற்கு வங்கம் 1985) அப்பதவி தற்காலிகமாக செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது. இதையடுத்து அதே பதவியில் SFAC மேலாண் இயக்குநராக நீடிப்பு.

(iv) வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கூடுதல் செயலராக இருக்கும் திரு. சபீலேந்திர ரவுல் இஆப (பஞ்சாப் 1985) அதே துறையில் தனிச் செயலராக நியமனம்.

(v) இந்தியத் தலைமைப் பதிவாளராக இருக்கும் திரு. சைலேஷ் இஆப (அஸ்ஸாம் 1985) செயலாளர் ஊதியத்துடன் தலைமைப் பதிவாளர்  பதவியில் நீடிப்பு.

  1. கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையகத்தின் இணைச் செயலராக உள்ள திரு. டி.கே. மனோஜ்குமார் இஆப (கேரளம் 1987) அப்பதவி தற்காலிகமாக உயர்த்தப்படுவதை அடுத்து  கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையகத்தின் கூடுதல் செயலராக நியமனம்.
  2. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலராக உள்ள திரு. அருண் சிங்கல் இஆப (உத்தரப் பிரதேசம் 1987) அவரது பதவி உயர்த்தப்படுவதை அடுத்து, கூடுதல் செயலராக நியமனம்.

(viii) உணவுப் பதனீட்டுத் தொழில்கள் அமைச்சக இணைச் செயலராக உள்ள திரு. தர்மேந்திர சிங் கங்வார் இஆப (பிஹார் 1988) அப்பதவி தற்காலிகமாக உயர்த்தப்படுவதை அடுத்து அதே அமைச்சகத்தில் கூடுதல் செயலராக நியமனம்.

 

***********

 

 

 

 


(Release ID: 1522533) Visitor Counter : 345
Read this release in: English