குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
யோகா, நவீன உலகுக்கு இந்தியா வழங்கும் விலைமதிப்பில்லாத வெகுமதி – குடியரசுத் துணைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2018 7:24PM by PIB Chennai
யோகா பயிற்சி உடல், மனது, ஆன்மீகம் ஆகிய பல முனைகளில் முழுமையான நன்மை அளிக்கக் கூடியது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பர்மார்த் நிகேதனில் சர்வதேச யோகா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
யோகாவின் அறிவியல் காலம் குறிக்க முடியாத தொன்மையானது என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். இருப்பினும் அதன் மூலம் கிடைக்கும் ஞானம் நமது நாழ்க்கையை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ பேருதவி செய்கிறது என்று அவர் கூறினார். யோகாவின் ஒரு பிரிவான ஹதா யோகாவின் உடற்பயிற்சி வடிவம், கி.பி.11 ஆம் நூற்றாண்டு வாக்கில் உருவானதாக தெரிவித்த அவர், இந்த உடற்பயிற்சி உலகளவில் பல ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்று வருகிறது என குறிப்பிட்டார். இந்த ஞான பொக்கிஷத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டுமென்று நாம் உணர்ந்ததன் பயனாக, பழமையான யோகா இந்தியாவின் விலைமதிப்பில்லாத வெகுமதியாக நவீன உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பர்மார்த் நிகேதனில் நடைபெறும் சர்வதேச யோகா விழா ஆற்றலின் உண்மையான சாட்சியாக உள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். யோகாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியிருப்பதுடன் அதனுடைய ஆற்றல் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்று சேர்த்துள்ளது என அவர் கூறினார்.
நவீன காலத்தின் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளை சமாளிக்க நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகா திகழ வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1522485)
வருகையாளர் எண்ணிக்கை : 134