தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிரசார் பாரதி அமைப்புக்கு நிதி வழங்குவது குறித்த விளக்கம்

Posted On: 02 MAR 2018 2:14PM by PIB Chennai

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கு பிரசார் பாரதி கீழ்படியவில்லை என்பதற்காக 2017 டிசம்பர் முதல் அந்த அமைப்புக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நிதி வழங்கவில்லை என்று அமைச்சகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான, உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த தவறான தகவல், கெட்ட எண்ணத்துடன் தவறான அடிப்படையில், அரைவேக்காட்டு உண்மைகளைக் கொண்டு வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வையில் அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை நோக்கமாக கொண்டது. அடிப்படையில் அவதூறான இயல்பு கொண்டது. எனவே, கீழ்கண்ட உண்மைகளை வெளிக்கொணருவது அவசியமாகிறது.

எந்த அரசு அமைப்பும் செயல்படுவதற்கும் ஆதாரப்புள்ளியாக நிதியியல் விவேகமும் பொறுப்பேற்கும் தன்மையும் இன்றியமையாதது. பிரசார் பாரதி மத்திய அரசின் மானிய உதவி பெறும் இதர அமைச்சகங்கள் அமைப்புகள் போல பொது நிதித்துறை விதிகளுக்கு (ஜி.எப்.ஆர்) உட்பட்டது. இந்த விதிகளின்படி மானிய உதவி பெறும் எந்த சுயாட்சி அமைப்பும் அமைச்சகத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் அடைவு மற்றும் நிதி இலக்குகள், நிதியாண்டில்  மானியத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கான காலக்கெடு ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவேண்டும். அமைச்சகம் பலமுறை நினைவூட்டல் செய்த பின்னரும் பிரசார் பாரதி அமைப்பு இதுவரை எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.

நிதியியல் பொறுப்பேற்கும் தன்மை விரயமான செலவினங்களை கட்டுப்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக, கீழக்கண்ட விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அமைச்சகம் பலமுறை வலியுறுத்திய பின்னர் பிரசார் பாரதியில் மனிதவள தகவல் முறையை கொண்டுவந்துள்ள நிலையில், ஊழியர்களுக்கான செலவினம் குறித்த சரியான தொகை கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், மாதம் ஒன்றுக்கு ஊதியம் என்ற தலைப்பில் சுமார் ரூ.30 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. (ஆண்டுக்கு ரூ.360 கோடி) நிதியியல் ஒழுக்கத்தை மேம்படுத்த சாம் பிட்ரோடா குழு மனித ஆற்றல் தணிக்கை உள்பட ஏராளமான நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்பேற்கும் தன்மையையும் மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.

எனினும், பிரசார் பாரதியின் அனைத்து ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதில், அரசு உறுதியுடன் உள்ளது என்பதை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

                           ----


(Release ID: 1522413) Visitor Counter : 293


Read this release in: English