உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

சத்தாராவில் மகாராஷ்டிராவின் முதலாவது மெகா உணவுப் பூங்கா தொடக்கம்

प्रविष्टि तिथि: 01 MAR 2018 7:56PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலாவது மெகா உணவுப் பூங்காவான சத்தாரா மெகா உணவுப் பூங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சதாரா மாவட்டம், டிகோன் கிராமத்தில் இன்று மார்ச், 1, 2018 உணவு பதப்படுத்தல் தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட்து.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட வழிகாட்டுதலின் கீழ் உணவு பதப்படுத்தல் தொழில்துறை அமைச்சகம் உணவு பதப்படுத்தல் துறைக்கு ஊக்கம் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும் இதனால் வேளாண் துறை பெரும் வளர்ச்சி பெறுவதுடன் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதிலும் அரசின் மேக் இன் இந்தியா முயற்சியிலும் பெரும் பங்குதாரராக இந்தத் துறை திகழும் என்றும் கூறினார்.


(रिलीज़ आईडी: 1522411) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English