மத்திய அமைச்சரவை
தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
01 MAR 2018 6:52PM by PIB Chennai
தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை (NFRA) அமைக்கவும் இதற்கு ஒரு தலைவர் பதவி, 3 முழுநேர உறுப்பினர் பதவிகள் ஒரு செயலாளர் பதவி ஆகியவற்றை உருவாக்குவதற்குமான முன்மொழிவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கணக்குத் தணிக்கை தொழிலை முறைப்படுத்தும் சுதந்திரமான அமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் மூலம் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவதில் ஒன்றாக இது இருக்கும். நிதித்துறையின் நிலைக்குழு அளித்த 21-வது அறிக்கையில் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட பரிந்துரை அடிப்படையில் இந்த அம்சம் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தாக்கம்:
இந்த முடிவு வெளிநாட்டு / உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவது, சர்வதேச நடைமுறைகளை எதிர்கொண்டு வணிகத்தின் உலகமயமாக்கலுக்கு உதவுவது, கணக்குத் தணிக்கை தொழிலை மேம்படுத்த மேலும் உதவி செய்வது என்ற பயன்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகார வரம்பு:
இந்தச் சட்டத்தின் 132-வது பிரிவின் கீழ் பட்டயக் கணக்காளர்களையும் அவர்களின் நிறுவனங்களையும் ஆய்வு செய்யும் என்எப்ஆர்ஏ-யின் அதிகார வரம்பு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெருமளவிலான பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நிறுவனங்களின் சொத்து மதிப்பு குறித்து விதிகளில் குறிப்பிடப்படும் பொதுமக்கள் நலன் சார்ந்த இதுபோன்ற நிறுவனங்களை ஆய்வு செய்யுமாறும் மத்திய அரசு குறிப்பிட முடியும்.
1949 பட்டயக் கணக்காளர்களுக்கான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அதன் உறுப்பினர்களுக்குப் பொதுவாகவும் விதிகளில் குறிப்பிடப்படும் சொத்து வரம்புக்கு கீழுள்ள பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பாகவும் தற்போதுள்ள ஐசிஏஐ-யின் ஒழுங்குமுறை பணியும் தொடரும்.
விதிகளில் குறிப்பிடப்படும் சொத்து வரம்புக்கு கீழுள்ள பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தணிக்கை தரத்துக்கான ஆய்வு வாரியமும் தொடரும். மேலும பல நிறுவனங்களும் என்எப்ஆர்ஏ-வால் இந்த ஆய்வு வாரியத்திற்கு அளிக்கப்படும். மேலும் என்எப்ஆர்ஏ-வுக்கு தணிக்கை தரம் மற்றும் கொள்கைகள் வகுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆலோசனைப் பங்களிப்பையும் ஐ சி ஏ ஐ தொடரும்.
பின்னணி:
கணக்குத் தணிக்கையில் ஏற்படும் முறைகேடுகளை உணர்ந்து உலகின் பல்வேறு அதிகார வரம்புகளை கணக்கில் கொண்டு சுயேச்சையான ஒழுங்குமுறையாளர்களைக் கொண்ட என்எப்ஆர்ஏ அமைப்பது அவசியமானது. கணக்குத் தணிக்கை தரத்தை அமலாக்கவும் தணிக்கை நிறுவனங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தி தணிக்கை தரத்தை உறுதி செய்யவும் இந்த அமைப்பு தேவைப்படுகிறது. முதலீட்டாளர்களை அதிகப்படுத்தவும் நிறுவனங்களின் நிதி நிலைமைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகவும் இத்தகைய அமைப்பு அவசியமாகிறது.
(Release ID: 1522390)
Visitor Counter : 223