பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

சென்னை உள்ளிட்ட 8 நகரங்களுக்கு பாதுகாப்பான நகர திட்ட ஆலோசனைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2018 6:19PM by PIB Chennai

மகளிர் பாதுகாப்புக்கு உரிய திட்டங்களை ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்கு பொறுப்பு வகிக்கும் நிர்பயா நிதியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட  அதிகாரிகள் குழு இன்று (01.03.2018) மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை  செயலாளர் திரு ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் தனது 14ஆவது கூட்டத்தை நடத்தியது.

இந்தக்குழு மூன்று திட்டங்கள் குறித்து விவாதித்த்து.

1. உத்தரப்பிரதேசத்தில் அவசர நடவடிக்கை ஆதரவு அமைப்பு / அவசர உதவி பொத்தான் திட்டம் தொடங்குவது:

மொபைல் தொலைபேசிகளில் அவசர உதவி பொத்தான்களை பொருத்துவது பெண்கள் அபாயத்தில் இருக்கும்போது உதவிக்கு அழைக்க பயன்படும். இந்த திட்டம் அவசர ஆதரவு நடவடிக்கை அமைப்பின் 112 இலக்க அவசர அழைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இணைக்கப்படும்.

2. 8 நகரங்களுக்கான பாதுகாப்பு நகர திட்டங்கள்

நிர்பயா நிதியத்தின் கீழ் இந்த புதிய பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 8 பெரிய நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விரிவான அணுகுமுறை அடிப்படையில் இது எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 நகரங்களுக்கான மொத்தம் ரூ.2919.55 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டங்கள் இன்று குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டன.

சென்னையில் ரூ.425.06 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டது. குற்றங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்குவது, ஜிஐஎஸ் அடிப்படையிலான குற்ற வரைபடம் தயாரித்தல், பொது போக்குவரத்து அமைப்பில் பாதுகாப்பு, காவல் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு, மகளிருக்கான உதவி தேவைகள் ஆகியன இத்திட்டத்தில் அடங்கும். கணினி குற்றங்கள் மற்றும் சட்ட உதவி இழப்பீடு சோதனைக்கூடம் ஆகியனவும் அமைக்கப்படும்.

3. சண்டிகரில் மத்திய குற்றத்தடயவியல் சோதனைக்கூடம்.

சண்டிகரில் உயிரிய அடிப்படை வசதி மற்றும் கருவிகளுடன் மாதிரி குற்றத்தடயவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

                                -----


(வெளியீட்டு அடையாள எண்: 1522388) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: English