நிதி அமைச்சகம்

முன்கூட்டிய விலைகள் ஒப்பந்தங்கள் 200ஐ ஏற்படுத்தி முக்கிய மைல்கல் சாதனையை அடைந்தது மத்திய நேரடி வரிகள் வாரியம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2018 1:04PM by PIB Chennai

2018 பிப்ரவரி மாத்த்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மேலும் ஏழு முன்கூட்டிய விலைகள் ஒப்பந்தத்தை  செய்துகொண்டுள்ளது. இந்த ஏழும் ஒருதரப்பான முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களாகும். இவற்றையும் சேர்த்து மத்திய நேரடி வரிகள் வாரியம் 300  முன்கூட்டிய விலைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்த வகையில் முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுநாள் வரை செய்துகொண்டுள்ள முன்கூட்டிய விலைகள் ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கை 203ஆகி உள்ளது. இவற்றில் 185 ஒரு தரப்பு ஒப்பந்தங்களாகவும், எஞ்சிய 18 இருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களாகவும் உள்ளன. நடப்பு நிதியாண்டில் இதுவரை மத்திய நேரடி வரிகள் வாரியம் இத்தகைய 51 ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. (44 ஒருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஏழு இருதரப்பு முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள்)

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1522377) வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी