இந்திய போட்டிகள் ஆணையம்

இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) காசியாபாத் மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ. 1,00,60,794/- அபராதம் விதித்துள்ளது.

Posted On: 28 FEB 2018 6:09PM by PIB Chennai

காசியாபாத் மேம்பாட்டு ஆணையம் (ஜிடிஏ) பிரதாப் விஹார் குடியிருப்புப் பகுதி வீட்டு வசதி திட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடுகள் செய்வதில் நியாயமற்ற நிபந்தனைகளை விதித்துத் தமது அதிகார நிலையைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளது. இது 2002-ம் ஆண்டின் போட்டிச் சட்டம் பிரிவு 4 (1) உடன் பிரிவு 4 (2) () (i) ல் உள்ள அம்சங்களுக்கு முரண்பாடாக இருப்பதை இந்தியப் போட்டி ஆணையம் கண்டறிந்துள்ளது.

     இதன் விளைவாக ஜிடிஏ-வுக்கு ரூ.1,00,60,794/- (ஒரு கோடியே அறுபதாயிரத்து எழுநூற்று தொண்ணூற்று நான்கு ரூபாய் மட்டும்) சிசிஐ அபராதம் விதித்துள்ளது. இது தவிர ஜிடிஏ-வுக்கு பணிகள் நிறுத்த ஆணையையும் பிறப்பித்துள்ளது.

     2016-ம் ஆண்டின் வழக்கு எண்.86-ன்படி 28.02.2018 அன்று இந்த ஆணை வழங்கப்பட்டு இதன் நகல் www.cci.gov.in என்ற சிசிஐ  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



(Release ID: 1522369) Visitor Counter : 191


Read this release in: English