நிதி அமைச்சகம்

சுங்கம் தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிக்கான இந்தியா – ஜோர்டான் இடையிலான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2018 7:00PM by PIB Chennai

சுங்கம் தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிக்கான இந்தியா – ஜோர்டான் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளிப்பதெற்கென பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  ஏற்பு வழங்கியது.

சுங்கம் தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கும், அவற்றை புலனாய்வு செய்வதற்கும், தொடர்புடைய தகவல் கிடைப்பதில் உதவி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் ஆகும் பொருட்கள் சார்ந்த விரைந்த அனுமதியை உறுதி செய்து வர்த்தகத்தை மேம்படுத்த இந்த உடன்பாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி :

இருநாடுகளின் சுங்கத்துறை அதிகாரிகளிடையே தகவல்கள் மற்றும் உளவுத்தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு உதவும் சட்ட கட்டமைப்பை இந்த உடன்பாடு வழங்குகிறது. சுங்க வரிகளை சரியாக பயன்படுத்துவது சுங்க குற்றங்களை தடுத்தல் மற்றும் புலனாய்வு செய்தல், சட்டப்படியான வர்த்தகத்திற்கு வசதி ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும். இரு நாடுகளின் சுங்கத்துறை நிர்வாகங்கள் இந்த ஒப்பந்தத்தின் வரைவு வாசகத்தை இறுதி செய்து அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளன. இந்த வரைவு ஒப்பந்தம் சுங்க மதிப்பு சரியானதா, சுங்கவரி வகைகள், இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன போன்ற இந்திய சுங்கத்துறையின் கவலைகள் மற்றும் தேவைகளை தகவல் பரிமாற்றத்திற்கு நிறைவு செய்யும் வகையில் வகை செய்கிறது.

                                ----



(Release ID: 1522336) Visitor Counter : 113


Read this release in: English