உள்துறை அமைச்சகம்
உள்நாட்டு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த இந்திய, இஸ்ரேல் கூட்டு வழிகாட்டுக் குழுக் கூட்டம்
प्रविष्टि तिथि:
28 FEB 2018 5:44PM by PIB Chennai
இந்தியா மற்றும் இஸ்ரேலின் உள்நாட்டு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கூட்டு வழிகாட்டு குழுவின் இரண்டு நாள் கூட்டம் இன்று நிறைவடைந்தது. கூட்டத்தில் பங்கேற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்கு உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் திரு. டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமை ஏற்றார். இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்கு இஸ்ரேல் தூதர் திரு. டேனியல் கார்மோன் தலைமை தாங்கினார். இரு தரப்பிலும் அமைச்சரங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவம் இருந்தது.
அரசு அல்லாத பயங்கரவாதம் உள்பட பயங்கரவாதிகளிடம் இருந்து வரும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலை எதிர்த்துப் போரிடவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் இரு தரப்பு வர்த்தகத்தையும் விரிவுபடுத்துவது என இருநாட்டு பிரதமர்களும் முடிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
திறன் மேம்பாடு மற்றும் காவல் படைகள் நவீனமயம் மற்றும் எல்லை நிர்வாகம் ஆகியவை இந்தச் சந்திப்பின் நோக்கங்களாகும். இந்த விவகாரங்களுக்கு கவனம் செலுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த விவாதங்கள் நட்பு சார்ந்த சூழலில் நடத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் நீடித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
******
(रिलीज़ आईडी: 1522131)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English