கலாசாரத்துறை அமைச்சகம்

பார்வைக்கு வராத புனித குரானின் 13 பிரதிகள் இடம்பெற்ற சிறப்புக் கண்காட்சி புதுதில்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 27 FEB 2018 6:17PM by PIB Chennai

மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ்  செயல்படும் பெருமைமிகு பண்பாட்டு நிறுவனமான தேசிய அருங்காட்சியகத்தில் முதல்முறையாக கி.பி.7ஆம் நூற்றாண்டுக்கும்,கி.பி.19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு கேலிகிராபி எனப்படும் சிறப்பு எழுத்து முறையில் எழுதப்பட்ட புனித குரான் தொகுப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தேசிய அருங்காட்சியகத்தின் கையெழுத்து பிரதிகளுக்கான முன்னாள் பொறுப்பாளரும் பிரபல அறிஞரும், கையெழுத்துப்பிரதி நிபுணருமான டாக்டர் நசீம் அக்தர் திறந்து வைத்தார். புனித குரான் என்ற தலைப்பிலான இந்த கண்காட்சி இன்று (27.02.18) முதல் இம்மாதம் 31-ஆம் தேதிவரை திறந்திருக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநரும் புதுதில்லி தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் துணைவேந்தருமான டாக்டர் பி ஆர் மணி, பல்வேறு நடைகளிலான கேலிகிராபி மற்றும் கையெழுத்துப் பிரதிகள் அதிகம் பரவி இருந்ததை இந்த கண்காட்சி விளக்குவதாகக் கூறினார். 13 தனித்தன்மை வாய்ந்த இதுவரை பார்வைக்கு வராத புனித குரான் நகல்கள் இடம்பெறும் இந்த கண்காட்சி தனித்துவம் பெறுகிறது என்றார். முக்கிய  கேலிகிராபி நடைகளான கூஃபிக், நாஷ்க், ரெய்ஹான், துல்த், பிஹாரி ஆகியவற்றில் எழுதப்பட்ட புனித குரான்கள் காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இருப்புகளிலிருந்து எனப்பொருள்படும் ஃப்ரம் த ரிஸர்வ்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற தொடரில் இந்த கண்காட்சி பத்தாவதாகும். இத்தொடரில் பல்வேறு இருப்பு சேகரிப்புகளிலிருந்து இருவார காலத்திற்கு பொருட்கள் தனியாக காட்சிக்கு வைக்கப்படும். பொதுக்காட்சியில் வைக்கப்படாத பெரும் எண்ணிக்கையிலான அருங்காட்சியக பொருட்கள் குறித்து பார்வையாளர்கள் அறிந்து கொள்வதற்கென இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கவனம் பெறாத பல முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் மீதான கவனத்தை பெறுவதற்கும், இந்த காட்சிகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

                                ----


(रिलीज़ आईडी: 1521964) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English