குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

ராஜஸ்தானில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தை மத்திய அமைச்சர் உமா பாரதி தொடங்கிவைத்தார்

Posted On: 27 FEB 2018 2:13PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் கரவ்ளியில் அமைந்துள்ள பீகம்புரா கிராமத்தில் ராஜஸ்தானில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான முன்னோடித் திட்டத்தினை (சுவஜல் யோஜனா) மத்தியக் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் செல்வி உமா பாரதி தொடங்கிவைத்தார். ஆண்டு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதுடன் இந்தத் திட்டம் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

விரைவில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தை மக்கள் தங்களுக்குச் சொந்தமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று செல்வி உமா பாரதி வலியுறுத்தினார்.ந்நாள் சந்திரசேகர் ஆசாத்தின் மறைவு தினம் என்று நினைவுறுத்திய அமைச்சர், அவரது சுயராஜ்ய கனவைப் பூர்த்தி செய்ய அரசு முயற்சித்து வருகிறது என்றார்.

நிலையான குடிநீர் விநியோகம் அளிப்பதற்காக, சமூக மக்களால் சொந்தமாக அமைக்கப்படும் குடிநீர் திட்டமே சுவஜல் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இந்தக் குடிநீர் விநியோக அமைப்பை ஏற்படுத்தத் தேவையான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசும் 10 சதவீதத்தை மக்களும் அளிப்பர்.

*****



(Release ID: 1521917) Visitor Counter : 191


Read this release in: English , Urdu