அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபை – சிஎஸ்ஐஆர், இந்துமாக்கடல் விளிம்பு நாடுகள் சங்கம் –ஐஓஆர்ஏ ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2018 5:57PM by PIB Chennai
லக்னோவில் உள்ள மத்திய மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் நிறுவனத்தை (சிஎஸ்ஐஆர்-சிஐஎம்ஏபி) மூலிகைத் தாவரங்கள் ஒருங்கிணைப்பு மையமாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபை – சிஎஸ்ஐஆர், இந்துமாக்கடல் விளிம்பு நாடுகள் சங்கம் –ஐஓஆர்ஏ-யின் அறிவியல் தொழில்நுட்ப மாற்றி வழங்குவதற்கான மண்டல மையம் ஆகியன செய்து கொண்டுள்ளன.
சிஎஸ்ஐஆர் – சிஐஎம்ஏபி-யில் உள்ள ஐஓஆர்ஏ மையம் முக்கியமான மூலிகைத் தாவரங்கள், அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள், அவை தொடர்பான ஏற்றுமதிகள் போன்றவற்றின் தரவுதளத்தை உருவாக்கும். மேலும் இந்த வகையில் வர்த்தகம், வியாபாரம் ஆகியவற்றை மேம்படுத்தி அறிவியல் பரிவர்த்தனைகளை உருவாக்கும் வகையில் கூட்டங்கள் மற்றும் பயிற்சித்திட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தும். இதன் மூலம் அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த வகையிலான வலுவான நிலையை அடைய இயலும்.
21 நாடுகள், 7 பேச்சுவார்த்தைக் கூட்டாளிகள் ஆகியவற்றுடன் இணைந்து, ஐஓஆர்ஏ மூலிகைத் தாவரங்கள் உள்ளிட்ட கூட்டுறவுக்கான 6 விஷயங்களை அடையாளம் கண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்
(வெளியீட்டு அடையாள எண்: 1521887)
வருகையாளர் எண்ணிக்கை : 149