ரெயில்வே அமைச்சகம்

சிரிஜான் எனப்படும் கூட்டு நடவடிக்கை மூலமான ரயில் நிலையப் புத்துயிரூட்டல் திட்டத்திற்கான 635 ரயில்நிலையங்கள் சார்ந்த கருத்துப்போட்டிகள் இந்திய ரயில்வேயின் MyGov வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 26 FEB 2018 5:50PM by PIB Chennai

இந்திய ரயில்வே நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் நாடெங்கும் உள்ள 600 பெரிய ரயில்நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கிஉள்ளது. இந்தப் பெரிய திட்டத்திற்காக அக்கறை கொண்ட அனைவரிடமிருந்தும் உதவியையும் ஈடுபாட்டையும் பெறுவது அவசியம். அக்கறை கொண்டோரின், அதாவது ரயில் பயணிகள், நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியாளர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கத்துடன் இந்திய ரயில்வேயின் 635 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான கருத்துப்போட்டிகளை “சிரிஜான்” என்ற கருத்துப்போட்டியை  26.01.2018 அன்று MyGov வலைதளத்தில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த கருத்துகள் திட்டவடிமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். 

     இந்திய ரயில்வேயின் ரயில்நிலையங்கள் மேம்பாட்டுக்கழகத்தின் சின்னம் மற்றும் விளம்பர வாசகம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்காக இதே வலைதளத்தின் மூலம் மற்றொரு போட்டியையும் இந்தக் கழகம் தொடங்கிஉள்ளது. சின்னங்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.75,000 ரொக்கப்பரிசும், விளம்பர வாசகத்திற்கு ரூ.75,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும். போட்டிக்கான நுழைவுகளை அனுப்ப கடைசி தேதி 26.03.2018.

     மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in வலைத்தளத்தைப் பார்க்கவும்.


(रिलीज़ आईडी: 1521868) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English