சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பதினைந்து நகரங்களில் உள்ளிணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

Posted On: 26 FEB 2018 1:12PM by PIB Chennai

நாக்பூர் மற்றும் வாரணாசியில் உள்ளிணைப்பு நிலையங்களை அமைக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடத்தி முடித்திருப்பதுடன், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையிலான அடுத்தகட்ட பணிகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. நாடு முழுவதும் உள்ள பதினைந்து நகரங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக நாக்பூர் மற்றும் வாரணாசி நகரங்களில் உள்ளிணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

ரயில், சாலை, துரித ரயில் போக்குவரத்து, துரிதப் பேருந்துக்கானப் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள்,  ஆட்டோ ரிக்ஷா, டாக்சிகள் மற்றும் தனியார் வாகனப் போக்குவரத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த உள்ளிணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள், ஒரு வகையான வாகனப் போக்குவரத்திலிருந்து மற்றொரு வகையான போக்குவரத்துக்கு எளிதில் மாறிச் செல்ல வழிவகை ஏற்படும்.

கூடுதல் விவரங்களுக்கு: www.pib.nic.in இணையத்தளத்தைக் காணவும்.



(Release ID: 1521803) Visitor Counter : 111


Read this release in: English , Urdu