பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

சவுதி அரேபிய அரசின் எரிசக்தி, தொழில்கள் மற்றும் கனிம வளத்துறையின் அமைச்சருடன் திரு. தர்மேந்திர பிரதான் சந்திப்பு

Posted On: 23 FEB 2018 5:37PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு  மற்றும் தொழில் முனைவுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், 2018, பிப்ரவரி 22 முதல் 26வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய அரசின் எரிசக்தி, தொழில்கள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சரும், சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் தலைவருமான மேதகு காலித் ஏ.அல்.பாலிஹ் உடன் புதுதில்லியில்   இன்று  பேச்சு நடத்தினார்.

இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இறக்குமதியில் சவுதி அரேபியா முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது என்று இந்தச் சந்திப்பில் திரு. பிரதான் தெரிவித்தார். இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர் விவரித்தார். இந்தியாவில் பெட்ரோலிய இருப்புத் தொழில் திட்டத்தில் சவுதி பங்களிக்கவேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்தார். சவுதியில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைச் சவுதி தரப்பினர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். இருநாடுகளும் முதலீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிறைவு செய்வது என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.



(Release ID: 1521749) Visitor Counter : 150


Read this release in: English