பிரதமர் அலுவலகம்
சவுதி அரேபியா அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
Posted On:
23 FEB 2018 10:41PM by PIB Chennai
சவுதி அரேபிய அரசின் மின்சாரம், தொழில் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் திரு. காலித் பின் அப்துல்ஆசிஸ் அல்-ஃபலியா புதுதில்லியில் இனறு பிரதமர் திரு. நரேந்திரமோடியைச் சந்தித்தார்.
சவுதி அரேபியா மன்னரின் வாழ்த்துகளை இந்தச் சந்திப்பின் போது பிரதமரிடம் அவர் தெரிவித்துக்கொண்டார். பிரதமரும் தனது வாழ்த்துகளைச் சவுதி அரேபிய மன்னரிடம் தெரிவிக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கும் இந்த ஆண்டிற்கான ஜனாதிரியா திருவிழாவில் இந்தியாவைச் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்ததற்கும் பிரதமர் தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
சவுதி அரேபிய அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்தியப் பொருளாதாரம் அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக லாபம் ஈட்டக்கூடியத் துறைகளான எரிசக்தி, விவசாயம், உணவு உற்பத்தி, மருந்துகள் மற்றும் மருத்துவச் சேவை, உரம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியத் துறைகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கும், சவுதி அரேபியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள சவுதி தொலைநோக்கு 2030 திட்டத்திற்கும் ஒற்றுமைகள் உள்ளதாகப் பிரதமர் கூறினார்.
இரு நாடுகளும் தங்கள் நட்புறவின்படி பல்வேறு துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துப் பொருளாதார இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்தத் தேவையான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
(Release ID: 1521733)
Visitor Counter : 132