அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நீடித்த உயிரி எரிபொருள் பற்றிய சர்வதேச மாநாடு. ஐசிஎஸ்பி 2018: ஒரு முன்னோட்டம்.

Posted On: 24 FEB 2018 2:15PM by PIB Chennai

உலகளாவிய தூய்மையான எரிசக்திக்கான முன் முயற்சிகளை விரைவுப்படுத்துவதற்காக 22 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஆராய்ச்சிக்கான உலகளாவிய புதிய இயக்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

ஆராய்ச்சிக்கான 7 புதிய இயக்கங்களுக்கான சவால்களில் நீடித்த உயிரி எரிபொருள் ஆராய்ச்சியும் ஒன்றாகும். இதற்கான முன்முயற்சிகளை பிரேசில், கனடா மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியா கூட்டாக மேற்கொண்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தின் ஸ்டெயின் கலையரங்கில். மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சிக்கான இயக்கம் மற்றும் உயிரி எதிர்கால திட்டம் ஆகியவை இணைந்து, நீடித்த உயிரி எரிபொருள் பற்றிய இரண்டு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன. உயிரி எரிபொருள் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் பங்குபெற்ற இம்மாநாட்டில், தற்போதைய அறிவுத்திறன், தகவல் பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டன. இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான அம்சங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக  இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூடுதல் விவரங்களுக்கு: www.pib.nic.in இணையத்தளத்தைக் காணவும்.



(Release ID: 1521728) Visitor Counter : 101


Read this release in: English