ரெயில்வே அமைச்சகம்

மாபெரும் பணியமர்த்தல் திட்டத்திற்கான விண்ணப்ப விதிமுறைகளை இந்திய ரயில்வே தளர்த்தியுள்ளது.
தேர்வர்களுக்கான வினாத்தாள்கள் 15 மொழிகளில் வழங்கப்படும். தேர்வர்கள் தற்போது எந்த மொழியிலும் கையெழுத்திடலாம்.

Posted On: 22 FEB 2018 7:29PM by PIB Chennai

குருப் சி நிலை ஒன்று (முந்தைய குருப் டி) மற்றும் நிலை இரண்டு பிரிவுகளில் 89,409 பணியிடங்களை நிரப்புவதற்கான உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நான்காண்டு இடைவெளிக்குப் பின்பு, இந்த ஆட்சேர்ப்புப் பணி தொடங்கியுள்ளது.  இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மாற்றங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்கூட்டியே போதிய தகவல் தெரியாததால் இந்த ஆண்டில்  பல தேர்வர்கள் தேர்வு எழுத முடியாதபடி, இந்த மாற்றங்கள்  தடுக்கின்றன.  இந்தியாவின் போக்குவரத்தில் உயிர்நாடியாகத் திகழும் ரயில்வே சிறப்பான சேவையை அளிக்க அதன் ஊழியர்கள் நியமனத்தில் நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும். 

அதன்படி, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவையும் சேர்ந்த ஆர்வமுடைய தேர்வர்களுக்கு ரயில்வேயில் பணி கிடைத்து நாட்டுக்குச் சேவை புரியும் வாய்ப்பை வழங்க ரயில்வே அமைச்சகம்  சில முக்கிய பிரிவுகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. 

அந்த மாற்றங்களில் சில வருமாறு:  

  1. வயது வரம்பில் தளர்வு: இயல்பாக விண்ணப்பிக்கத் தகுதி இருப்பதாகக் கருதப்படும்  பல தேர்வர்கள்,  அறிவிக்கப்பட்ட வயது கட்டுப்பாடு காரணமாகத் தகுதியிழக்க நேர்ந்தது.  அதனால், பல்வேறு பிரிவுகளில் வயது வரம்பு இரண்டாண்டுகளுக்குத் நீடிக்கப்பட்டுள்ளது.  தேர்வர்களுக்கான வயதுவரம்பு பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.

 

CEN 01/2018 – உதவி லோகோ ஓட்டுநர் (ALP) & தொழில்நுட்பப் பணியாளர்

(வயது ஆண்டுகளில்)

சாதி

அறிவிக்கப்பட்டது

திருத்தப்பட்டது

ஒதுக்கீடு அற்றது

28

30

இதர பிற்படுத்தப்பட்டோர்

31

33

பட்டியல் இனத்தவர்

33

35

பழங்குடியினர்

33

35

CEN 02/2018 – நிலை-1 (முந்தைய குரூப் டி)

(வயது ஆண்டுகளில்)

சாதி

அறிவிக்கப்பட்டது

திருத்தப்பட்டது

ஒதுக்கீடு அற்றது

31

33

இதர பிற்படுத்தப்பட்டோர்

34

36

பட்டியல் இனத்தவர்

36

38

பழங்குடியினர்

36

38

       
  1.  தேர்வுக் கட்டணம்: விண்ணப்பித்துவிட்டுத் தேர்வு எழுதாமல் தவிர்க்கும் ஆர்வமற்ற தேர்வர்களை தவிர்க்கும் வகையில் கட்டணம் விதிக்கப்பட்டது.  தேர்வுக்கு கட்டமைப்பு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அதிக செலவு செய்வதை இது மிச்சப்படுத்தும். விலக்குப்பெறாத தேர்வர்களுக்கு ஆட்சேர்ப்புத்  தேர்வுக்கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அதிலிருந்து ரூ.400-ஐ திருப்பி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தொகையைப் பெறுவதற்கு தேர்வர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆன்லைன் மூலம் தெரிவிக்க வேண்டும்.  இந்த வசதி விரைவில் செயல்படுத்தப்படும்.  பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போன்ற விலக்கு பெறும் பிரிவினரிடம் இருந்து ரூ. 250 வசூலிக்கப்படும்.  இவர்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு முழுத் தொகையும் திரும்ப அளிக்கப்படும்.  இது ஆர்வமுள்ள தேர்வர்கள் தேர்வு எழுதுவதை உறுதிசெய்ய உதவும்.
  2. கல்வித் தகுதி: அனைத்து நிலை-1 பணிகளுக்கும் குறைந்தபட்சம் கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஜூலை 2017 என   நிர்ணயிக்கப்பட்டது.  ஜூலை 2017-ல் நிலை-1 பணியிடங்களில் பலவற்றுக்குக் கல்வித் தகுதி விதிமுறை  10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ அல்லது இணையான கல்வி என மாற்றப்பட்டது.  இது முன்கூட்டியே மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாததால் இந்த பணிகளுக்காகப் பல ஆண்டுகளாகத் தயாராகிவரும் தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்படும்.  முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டிருந்தால், தேவையான சான்றிதழ்களை பெறவும், தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் முடிந்திருக்கலாம்.  எனவே, இந்தத் தேர்வுக்காக கல்வித் தகுதி விதிமுறை 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ அல்லது இணையான தேர்வு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதனால், ஏராளமான தேர்வர்கள் பணியிடங்களுக்குத் தேர்வில் அதிகளவு பங்கேற்பதை உறுதி செய்யவும் முடியும்.  மேலும், ஊழியர்களின் திறனை  உறுதி செய்ய ரயில்வே கூடுதல் பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.  
  3. மொழி:  தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் வழங்கப்படும்.  இந்தியா முழுவதும் உள்ள தேர்வர்களுக்கு இது உரிய வாய்ப்பை வழங்கும். 
  4. கையெழுத்து:   தேர்வர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக எந்த மொழியில் வேண்டுமானாலும் கையெழுத்திடலாம்.  இது இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும். 

 (Release ID: 1521532) Visitor Counter : 400


Read this release in: English