தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடையே ஒத்துழைப்புக்கான உத்தித் திட்டம் வெளியீடு
प्रविष्टि तिथि:
22 FEB 2018 6:26PM by PIB Chennai
பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறையின் நிறுவனங்களுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கு வகை செய்யும் உத்தித் திட்டத்தை மத்திய தகவல்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா இன்று (2018, பிப்ரவரி 22) தில்லியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, “அரசின் பல்வேறு செயல்பாடுகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கியமான பங்கினைச் செலுத்த வேண்டியிருக்கிறது. நுகர்வோர் நலன்களைக் காத்தல், பேரிடர் மேலாண்மை, தேசப் பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், இந்திய அரசு நிதியுதவியிலான முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய அரசின் செயல்பாடுகளிலும் இதே பங்களிப்பைச் செலுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், பாரத அகண்டஅலைவரிசை கட்டமைப்பு (BBNL), இந்திய தொலைத்தொடர்பு ஆலோனை நிறுவனம் (TCIL), இந்திய தொலைபேசி நிறுவனம் (ITI), மற்றும் இதர நிறுவனங்களான தொலைத்தொடர்புப் பொறியியல் மையம் (TEC), சி-டாட் (C-DoT) ஆகிய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார்.
டிஜிட்டல் இந்தியா, பொலிவுறு நகரம் ஆகிய திட்டங்களால் உருவாகும் போட்டியைச் பொதுத் துறை நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அமைச்சர் சின்ஹா வலியுறுத்தினார். தங்களது ஆதாரங்களை அதிகபட்ச அளவுக்கும் லாபகரமான வகையிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அமைச்சர், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். பாரத்நெட் (BharatNet) நிறுவனமும் இந்திய தொலைபேசி நிறுவனமும் (ITI) இணைந்து செயல்படுவது சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தொலைத்தொடர்புத் துறைச் செயலர் திருமதி அருணா சுந்தர்ராஜன் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.
***
(रिलीज़ आईडी: 1521524)
आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English