நிதி அமைச்சகம்

“தேர்தல் பத்திரம் திட்டம் 2018”: பாரத ஸ்டேட் வங்கியின் 4 கிளைகளில் விற்பனை

Posted On: 22 FEB 2018 6:50PM by PIB Chennai

தேர்தல் பத்திரத் திட்டம் (2018) குறித்து மத்திய அரசு தனது அரசிதழில் (கெஜட்) கடந்த ஜனவரி 2ஆம் தேதியிட்ட S.O. No.29 (E)  எண்ணுள்ள அறிவிக்கையில் வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்தல் பத்திரங்களைத் தனிப்பட்ட இந்தியாவின் குடிமகனோ குடிமகனாக அறிவிக்கப்பட்டவரோ வாங்கிக் கொள்ளலாம். ஒரு நபர் இந்தப் பத்திரங்களைத் தனியாகவோ, கூட்டாகவோ பெற்றுக் கொள்ளலாம். இந்திய அரசின் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951) 29ஏ பிரிவின்கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தக் கட்சி மக்களவைத் தேர்தலிலோ சட்டப் பேரவைத் தேர்தலிலோ ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டும். அக்கட்சிகளே தேர்தல் பத்திரங்களைப் பெறுவதற்குத் தகுதியுடையவை. இந்தப் பத்திரங்களை வாங்கும் தகுதியான அரசியல் கட்சி அதை மாற்றும்போது, வங்கிக் கணக்கு மூலமே நிதியைப் பெற முடியும். அதிகாரம் பெற்ற கிளைகளில் மட்டுமே கொடுத்து நிதியைப் பெற இயலும்.

இந்தப் பத்திரங்களை வழங்கவும், அவற்றைத் திருப்பித் தருவோருக்கு உரிய தொகையை அளிப்பதற்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கீழ்க்காணும் நான்கு கிளைகளுக்கு மட்டும் தற்போது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 நடப்பு ஆண்டின் முதல் காலாண்டுக்கான தேர்தல் பத்திரத்தின் முதல் வெளியீடு, 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. முதல் விற்பனை 2018ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பத்திரங்கள் மார்ச் 10ம் தேதி வரையில் விநியோகிக்கப்படும்.

சென்னை பிரதான கிளை

84, ராஜாஜி சாலை,

சென்னை -600 001.

(கிளை எண்: 00800)

 

கோல்கத்தா பிரதான கிளை

சம்ருத்தி பவன்,

1, ஸ்டிராண்ட் தெரு.

கோல்கத்தா 700 001

(கிளை எண் 00001)

மும்பை பிரதான கிளை

ஹார்னிமேன் சர்க்கிள்,

கோட்டை,

மும்பை – 400 001

 (கிளை எண் 00300)

புதுதில்லி பிரதான கிளை

11, பார்லிமென்ட் தெரு,

புது தில்லி 110 001

 

(கிளை எண் 00691)

 

தேர்தல் பத்திரம் விநியோகம் செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லத் தக்கது. பத்திரம் வாங்கும் எந்த அரசியல் கட்சியும் கெடு தேதி முடிந்த பிறகு வங்கியில் அதை டெபாசிட் செய்து, நிதியைப் பெற இயலாது. தகுதியான  எந்த அரசியல் கட்சியும் பத்திரத்தை வங்கியில் டெபாசிட் செய்தவுடன் அதே வங்கியில் அக்கட்சி வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் அதே நாளில் சேர்க்கப்பட்டுவிடும்.

 

***************



(Release ID: 1521523) Visitor Counter : 754


Read this release in: English