சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வெளிநாடுகளில் மருத்துவப்படிப்பு மேற்கொள்ளவும் நீட் தேர்வு அவசியம்

Posted On: 22 FEB 2018 5:50PM by PIB Chennai

2002 தணிக்கை தேர்வு - 2002 (Screening Test) விதிமுறையில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்களை அடுத்து,  வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிலையங்களில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கும், நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டியது அவசியம்.

     இந்த முடிவை வெளிப்படையாக அறிவித்தபின்பு, ஏற்கனவே வெளிநாடு சென்ற மாணவர்கள், தங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சகத்தில் பெறப்பட்டுள்ளன.  இந்நிலையில், இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற  இந்தியர்கள், 2018 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர், இந்தியாவுக்கு வெளியே எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் கல்வி பயில வேண்டுமெனில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த முடிவு 2018 மே மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும். தற்போதைய விதிமுறைகளின்படி, இந்திய மருத்துவ கவுன்சிலிலிருந்து தகுதிச் சான்றிதழ் பெற்று, மருத்துவப் படிப்பில் ஏற்கனவே சேர்ந்தவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.



(Release ID: 1521462) Visitor Counter : 121


Read this release in: English