வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2018 பிப்ரவரி 19-20 தேதிகளில் எம்.சி.11க்குப் பின்னரான உலக வர்த்தக அமைப்பு குறித்து சிந்தனைக் கூட்டம்

Posted On: 20 FEB 2018 7:21PM by PIB Chennai

எம்.சி.11க்குப் பிந்தைய கட்டத்தில் டபிள்யு.டி.ஓ. என்பது குறித்த இரண்டு நாள் கூட்டம் 2018 பிப்ரவரி 19-20 தேதிகளில் வர்த்தகத்துறை மற்றும் டபிள்யு.டி.ஓ. மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொழில்துறையினர், அரசினர், கல்வியாளர்கள், சிந்தனாவாதிகள், மக்கள் சமூக பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக கொள்கை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பில் சிறப்பு மற்றும் மாறுபட்ட நடைமுறை ஒரு முக்கிய அம்சமாக உள்ளது என்றும், இது இந்தியாவில் பேச்சுக்குட்பட்டது அல்ல என்றும் மத்தியத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். உலக வர்த்தக அமைப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அமைச்சர், பலதரப்பு முக்கியத்துவம் குறித்து டாவோசில் பிரதமர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார்.

2018 மார்ச் 19 மற்றும் 20 தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான அசாதார கூட்டத்திற்கு இந்தியா முக்கிய இடம் அளித்திருப்பதாகக்   கூறிய அமைச்சர், எல்.டி.சி.க்கள், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் காண்பித்த உற்சாகத்திற்குப் பாராட்டு தெரிவித்த அமைச்சர் அவ்வப்போது இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் வழக்கமாக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.



(Release ID: 1521219) Visitor Counter : 105


Read this release in: English