கலாசாரத்துறை அமைச்சகம்

தூய்மையை வலியுறுத்தும் வகையில் பிப்ரவரி 21, 22 தேதிகளில் சன்ஸ்க்ரிதி மகோத்சவ் ‘ஸ்வச்கிரஹா – பாப்பு கோ கார்யாஞ்சலி’ எனும் 2 நாள் விழா வாரணாசியில் நடைபெறுகிறது

Posted On: 20 FEB 2018 5:39PM by PIB Chennai

வாரணாசியின் ஆக்கப்பூர்வமான மற்றும் கலாச்சார துறைகளைக் கொண்டாடவும், கலாச்சார வடிவங்களைப் பயன்படுத்தி தூய்மையின் அவசியம் குறித்த கவனத்தை ஈர்க்கவும் வாரணாசியில் உள்ள மன் மந்திர் காட், அஸ்ஸி காட் ஆகிய இடங்களில் 2018, பிப்ரவரி 21, 22 தேதிகளில் சன்ஸ்க்ரிதி மகோத்சவ் ஸ்வச்கிரஹா – பாப்பு கோ கார்யாஞ்சலிவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகை நெடுகிலும் உள்ள தொட்டு உணரக்கூடியதும், உணரமுடியாததுமான பாரம்பரிய பொருட்களை இந்தப் பெருவிழா ஒருங்கிணைக்கும்.  மேலும், தொன்மைவாய்ந்த நகரத்தையும், நதியையும் பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது பற்றி கலை வடிவங்களைப் பயன்படுத்தி கல்வியாளர்களும், கலைஞர்களும் கைவினையாளர்களும், கவிஞர்களும், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அமைப்புகளும் நிகழ்ச்சிகளை நடத்தும். கலாச்சார அமைச்சகத்தோடு இணைந்துள்ள மத்திய அரசின் இடைவிளக்க மையங்களைச் சேர்ந்த பள்ளிச்சிறார்களால் நிகழ்த்தப்படும் கண்காட்சிகள், பாடல்கள், பொம்மலாட்டம், வீதிநாடகம், கிராமிய நடனங்கள் ஆகியவற்றால் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஸ்வச்சகிரஹா: பாப்பு கோ கார்யாஞ்சலிஎன்ற தலைப்பின்கீழ், ஸ்வச்சகிரஹா என்ற மையப் பொருள் குறித்த நிகழ்வுகளை நடத்த இரண்டு நாள் விழாவில் கவனம் செலுத்தப்படும்.

2008 பிப்ரவரி 21, 22 தேதிகளில் மாலை 6 மணியிலிருந்து Sanskriti.goi என்ற யூடியூப் அலைவரிசையில் ராஸ் பனாரஸ் மகோத்சவ் நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.    



(Release ID: 1521199) Visitor Counter : 138


Read this release in: English