பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை – 275 நிடாகட்டா-மைசூரு பகுதியை ஆறு வழிப்பாதையாக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 1:12PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 275ல் 74.200 கி.மீட்டரில் இருந்து 135.304 கி.மீட்டர் வரை நிடாகட்டாவில் இருந்து மைசூரு வரை ஆறு-வழிப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட்து.

சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிப்பாதை அமைக்கும் இந்தப் பணிக்குச் சராசரியாக 2919.81 கோடி செலவாகும் என்றும் இதில் நிலம் கையகப்படுத்தும் செலவு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு முந்தைய செலவும் அடங்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. சாலைக் கட்டுமானத்திற்கான செலவு சராசரியாக ரூ. 2028.93 கோடியாக இருக்கும்.

திட்டக் கட்டுமானத்தின் போது இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். நெடுஞ்சாலை  மேம்பாடு மற்றும் அகலமாக்கும் பணியின் மூலம் இந்தப் பகுதி பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்று, அதன் காரணமாக உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டப் பணியின் கட்டுமானத்தின்  போது 2,48,000 (சராசரியாக) மனித நாட்கள் வேலை உருவாக்கப்படும்.


(Release ID: 1521163)
Read this release in: English