எரிசக்தி அமைச்சகம்

மின்சாரத் துறையில் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்க மத்திய மின்சார ஆணையத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு அவசியம் என்று மின்சாரத் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 20 FEB 2018 2:22PM by PIB Chennai

இந்திய மின்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகரித்துவரும் வாய்ப்புகளும், சவால்களும் என்பது  பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான இரண்டு நாள் மாநாட்டை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஆர். கே. சிங் இன்று தொடங்கிவைத்தார்.  மத்திய மின்சார ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

      மின்சாரத் துறையில் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்க மத்திய மின்சார ஆணையத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு அவசியம் என்பதை அமைச்சர் தமது தொடக்க உரையில் வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் உருவாகும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தற்போதுள்ள நடைமுறையில் மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க நல்ல கட்டுரைகளுக்குப் பரிசளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    

உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய திரு சிங், உள்நாட்டில் உருவாகும் அனைத்தையும் குறைத்து மதிப்பிடும் நமது குணத்தில் மாற்றம் ஏற்படுவது அவசியம்  என்றார்.

     நமது பொறியாளர்களால் வழங்கப்படும் தீர்வுகள் சிறந்ததாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு என்றும் அவர் கூறினார்.

 

 

 



(Release ID: 1521121) Visitor Counter : 94


Read this release in: English