சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

‘சார்தாம் மகாமார்க் பரியோஜனா’வின் பகுதியாக உத்தரகாண்டில் சில்கியாரா பெண்ட்-பர்கோட் சுரங்கப் பாதைத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2018 1:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் உத்தரகாண்டில் சில்கியாரா பெண்ட் - பர்கோட் இடையே இரண்டு திசைகளில் 4.531 கி.மீ தூர இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கும்  திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தராசு - யமுனோத்ரி பிரிவில் செயினேஜ் 25.400 கி.மீ., செயினேஜ் 51.000 கி.மீ இடையே அணுகுப்பாதை உள்ளிட்ட அவசரகால வெளியேற்று வழித்தடத்தையும் உள்ளடக்கியது.

     உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 134 (பழைய தேசிய நெடுஞ்சாலை 94) என்ற வழித்தடத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

     இந்தத் திட்டத்தின் கட்டுமானக் காலம் 4 ஆண்டுகள். நிலம் கையகப்படுத்துதல், சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், கட்டுமானத்திற்கு முந்தைய பிற பணிகள், அதேபோல், சுரங்கப்பாதையை 4 ஆண்டுகளுக்குப் பராமரித்தல் உட்பட திட்டத்தின் மொத்த செலவுத் தொகை ரூ.1383.78 கோடியாகவும், கட்டுமானச் செலவு ரூ.1119.69 கோடியாகவும் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1521120) வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க: English