பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

130 கி.மீ. நீள ஜெய்பூர் – மால்கன்கிரி புதிய வழித்தடத் திட்டத்தை ரூ. 2676.11 கோடியில் நிறைவு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 1:09PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஜெய்பூர் மால்கன்கிரி இடையே 130 கிலோ மீட்டர்  தொலைவுக்குப் புதிய வழித்தடம் அமைக்கும் திட்டத்தை 2626.11 கோடி செலவில் நிறைவு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 2021-22ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த்த் திட்டம் ஒடிஷா மாநிலம் கோரபுட் மற்றும் மால்கன்கிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்தப் புதிய வழித்தடம் தற்போதுள்ள கோட்டவலாசா – கிரண்டுல் மார்க்கத்தில் மால்கன்கிரி, போய்பாரிகுடா, டான்கினிகுடா, மதிலி, போண்ட்ரிபானி சாலை மற்றும் இதர பெரிய நகரங்களை ஜெய்பூர் உடன் இணைக்கும்.

இந்தத் திட்டம் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இணைப்பை அளிப்பதுடன் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொருளாதார வாய்ப்புக்களையும் அளிக்கும். வளர்ச்சியின் மூலம் இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும் இது உதவும்.

இது தவிர இந்தத் திட்டம் 31.2 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.



(Release ID: 1521117) Visitor Counter : 121


Read this release in: English