பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
100.6 கிலோமீட்டர் தூரமுள்ள முசாஃபர்பூர்-சகாலி, 109.7 கிலோமீட்டர் தூரமுள்ள சகாலி-வால்மீகி நகர் வழித்தடங்களை முறையே ரூ. 1347.61 கோடி, ரூ.1381.49 கோடி செலவில் மின்மயத்துடன் கூடிய இரண்டு தடங்களாக்கும் திட்டங்களுக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
20 FEB 2018 1:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் 100.6 கிலோமீட்டர் தூரமுள்ள முசாஃபர்பூர்-சகாலி, 109.7 கிலோமீட்டர் தூரமுள்ள சகாலி-வால்மீகி நகர் வழித்தடங்களை முறையே ரூ. 1347.61 கோடி, ரூ.1381.49 கோடி செலவில் மின்மயத்துடன் கூடிய இரண்டு தடங்களாக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் பீகாரில் உள்ள முசாஃபர்நகர், கிழக்கு சாம்பரான் (மோதிஹரி) மேற்கு சாம்பரான் (பெட்டையா) ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
இரட்டைத் தடங்களாக்குவது முசாஃபர்பூரிலிருந்து வால்மீகி நகர் வரையிலான வழித்தடம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, திறனையும், தொடர்பையும் மேம்படுத்தும். மேலும் பொருளாதார வளத்திற்கும், இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
மேலும் முசாஃபர்பூர்-சகாலி மற்றும் சகாலி-வால்மீகி நகர் திட்டங்களின் கட்டுமானப் பணிகளின்போது முறையே, 24.14 லட்சம், 26.33 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.
(Release ID: 1521086)