சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி கர்நாடகாவில் ரூ. 3700 கோடி மதிப்புள்ள 500 கி.மீ. நீள நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார்

प्रविष्टि तिथि: 19 FEB 2018 4:14PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறைகளின் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் ரூ. 873.5 கோடி மதிப்புடைய 138.5 கி.மீ நீள நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கர்நாடகா மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள திரு. கட்கரி, ஷிமோகா, பெல்லாறி, பிதார், பிஜாபூர் மற்றும் ஹூப்ளி மாவட்டங்களில்  சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.

இன்று ஷிமோகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கர்நாடகா மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு வரை 6760 கி.மீ. நீள நெடுஞ்சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2014-17 கால கட்டத்தில் 6805 கி.மீ. நீள நெடுஞ்சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், வரும் இரண்டு ஆண்டுகளில் கர்நாடாக மாநிலத்தில் சுமார் ரூ. 1,44,922 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய நெடுஞ்சாலை திட்டத்தில் தமிழகத்தை இணைக்க கூடிய நெடுஞ்சாலைகள் கீழ்வருமாறு:

பெங்களூர் வட்டச் சாலை (STRR)

  • இந்த வட்டச் சாலையின் மொத்த நீளம் கர்நாடக மாநிலத்தில் 140 கி.மீ. மற்றும் தமிழகத்தில் 45 கி.மீ. ஆகும். இந்த திட்டத்தின் தோராய மதிப்பு ரூ. 10, 000 கோடி

சென்னை- பெங்களூர் அதிவேகச் சாலை:

  • இந்த அதிவேகச் சாலை மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. 76 கி.மீ கர்நாடகாவிலும், 91 கி.மீ. ஆந்திர பிரதேசத்திலும், 94 கி.மீ. தமிழகத்திலும் அமையும். இதன் தோராய மதிப்பு ரூ. 16, 000 கோடி.

(रिलीज़ आईडी: 1521045) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English