நிதி அமைச்சகம்

வருமானத்தின் மீதான வரி தொடர்பான இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு மற்றும் நிதி ஏய்ப்புத் தடுப்பு குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா-ஈரான் நாடுகள் புதுதில்லியில் கையெழுத்திட்டன.

Posted On: 17 FEB 2018 5:11PM by PIB Chennai

வருமானத்தின் மீதான வரி தொடர்பான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்புத் மற்றும் நிதி ஏய்ப்புத் தடுப்பு குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா-ஈரான் நாடுகள் புதுதில்லியில் இன்று கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா மற்ற நாடுகளுடன் இதுதொடர்பாகச் செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் போலவே இந்த உடன்படிக்கையும் அமைந்துள்ளது. முதலீடுகள் குவியவும், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். அத்துடன் இரட்டை வரிவிதிப்பையும் இது தடுக்கும். சமீபத்திய சர்வதேச தரத்துக்கு இணையாக இரண்டு நாடுகளும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். வரிவிதிப்பு விசயத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன் இரட்டை வரிவிதிப்பு மற்றும் வரிஏய்ப்பைத் தடுக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

இந்தியா தடம்பதித்துள்ள G-20 பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆதாயத் திட்டத்தின் அடிப்படையில் குறைந்தபட்சத் தரத்திற்குத் தொடர்புடையதாக இந்த உடன்படிக்கை அமையும்.

--------



(Release ID: 1520937) Visitor Counter : 114


Read this release in: English