சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

“உலக சுற்றுசூழல் தினம் 2018 அடையாள கொண்டாட்டம் அல்ல, அது ஒரு செயல்திட்டம்”: டாக்டர். ஹர்ஷ் வர்தன்

Posted On: 19 FEB 2018 3:07PM by PIB Chennai

பிளாஸ்டிக்கைத் தீவிர அச்சுறுத்தல் என்று கூறிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க அமைச்சகமே வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உலக சுற்றுசூழல் தினம் 2018ன் உலக பிரதிநியாக இந்தியாவை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உலக சுற்றுசூழல் தினம் 2018  அடையாள கொண்டாட்டம் அல்ல, து ஒரு செயல்திட்டம் என்று கூறினார். பசுமைச் சமூகப் பொறுப்புணர்வை மக்கள் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர், அன்றாட வாழ்வில் பசுமை சார்ந்த நற்செயல்களை மேற்கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதை இந்தியர்கள் முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர் என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இந்தியாவைப் பொறுத்தமட்டில், வெறும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் மட்டும் அல்ல, அது உண்மையான தார்மீக பிரச்சினையும், வருங்கால சங்கதியினருக்கான இயக்கமுமாகும் என்று கூறினார்.

     இந்த ஆண்டு உலகச் சுற்றுசூழல் தினம் “பிளாஸ்டிக் மாசு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், உள்ளூர் அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் பங்கோடு உலகச் சுற்றுசூழல் தினம் 2018 நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படும். தலைநகர் தில்லியிலும் மற்ற பகுதிகளிலும் 2018 ஜூன் 1 முதல் 5, வரை  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

*****



(Release ID: 1520924) Visitor Counter : 467


Read this release in: English