விவசாயத்துறை அமைச்சகம்

”விவசாயம் 2022- விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” என்ற பெயரில் நடத்தப்படும் விவசாயம் பற்றிய தேசிய மாநாடு திறந்துவைக்கப்பட்டது.

Posted On: 16 FEB 2018 5:31PM by PIB Chennai

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் (MoA&FW) ஏற்பாடு செய்துள்ள  ”விவசாயம் 2022- விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” என்ற பெயரில் நடத்தப்படும் விவசாயம் பற்றிய தேசிய மாநாடு புது தில்லியில் பூசா என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேசிய விவசாய அறிவியல் வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.(இந்த இரண்டு நாள் மாநாடு 2018, பிப்ரவரி 19,20 தேதிகளில் நடைபெறும்) இந்த மாநாடு மாண்புமிகு பிரதமர் அவர்களின் வழிகாட்டுதல்படி விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு வழிகாணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க விரும்பும் அரசின் நோக்கத்திற்குச் செயல்வடிவம் தர, உரிய கருத்தொற்றுமையுடன் கூடிய பரிந்துரைகளை உருவாக்குவதாகும்.

நாட்டில் விவசாயிகளின் நன்மைக்காக நடைமுறைப்படுத்தக்கூடிய  தீர்வுகளை வழங்குவதே இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

இந்த மாநாட்டில் பங்குபெறுவோரிடம் பல பிரிவுகளை உள்ளடக்கிய விரைவான விவசாயப் பலன்களை வழங்கும் திட்டங்கள் ஆலோசனைகள் இருப்பின் அவற்றைப் பரிசீலித்து, அவற்றை நீண்டகால பலன்களை வழங்கும் திட்டங்களாக முன்னெடுக்க அரசு ஆர்வமாக இருக்கிறது.

இந்த மாநாட்டின் கவனம் முழுவதும் விவசாயிகளை முன்னேற்றுவதற்குத் தேவையான வழிவகைகளை உருவாக்குவது  மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது



(Release ID: 1520917) Visitor Counter : 196


Read this release in: English