நித்தி ஆயோக்

மின் பயணிப்பில் பாய்ச்சலுக்குத் தயாராகிறது இந்தியா: நிதின் கட்கரி

அடுத்த 4 மாதங்களில் தனது அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்க்க்கூடியதாக மாற்றுகிறது நிதி ஆயோக்

Posted On: 15 FEB 2018 6:11PM by PIB Chennai

மின்சார உதவியுடன் பயணிப்பதில் பாய்ச்சலுக்கு இந்தியா தயார் நிலையில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறியுள்ளார். நிதி ஆயோக் வளாகத்தில் இன்று  ‘சார்ஜிங் தி டிரைவ்’ என்ற நிகழ்ச்சியில் மெதுவாகவும் வேகமாகவும் சார்ஜ் செய்யும் மின்சார வாகன சார்ஜர்களை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நிதி ஆயோக்கில் 17 மின்சாரத்தால் இயங்கும் வாகன்ங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த்து இன்னொரு கவர்ச்சிகரமான அம்சமாகும்.

மின்சாரத்தல் இயக்கும் வாகனங்கள் நகர்வை மேம்படுத்த நிதி ஆயோக் எடுத்திருக்கும் இந்த வரலாற்றுப் புரட்சிகரமான நடவடிக்கை புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று திரு. கட்கரி பாராட்டினார். அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதுடன் மாசு ஏற்படுத்தும் அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பெருமளவில் குறைக்க மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துடன் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் முன்னேற்ற வாய்ப்புகளையும் மத்திய அமைச்சர் இணைத்துப் பேசினார். மேக் இன் இந்தியா மின்சார வாகன உற்பத்திக்கு உதவிட முன்வர வேண்டும் எனத் தொழில்துறையை வலியுறுத்திய அவர் முதலில் வந்து முதலில் லாபமீட்டுங்கள் என்ற மந்திரத்தை அளித்ததுடன் தரத்தில் கடுமையான கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். பொதுப் போக்குவரத்தில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவித்த அவர் தில்லியில் உள்ள தவுலகுவானில் இருந்து மனேசாருக்கு  70 கிலோ மீட்டர் மின்சார கம்பிவழி அமைப்பு விரைவில் நிறைவடையும் என்றார். தற்போதுள்ள பெட்ரோல் பங்க்குகள் உள்கட்டமைப்பில் மின்சார சார்ஜிங் வசதி அளிக்கப்பட இருப்பது குறித்தும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக்கின் முதன்மைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த், அடுத்த 4 மாதங்களில் தம்மிடம் உள்ள அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக நிதி ஆயோக் மாற்றும் என்றார். “இரு சக்கரம், மூன்று சக்கரம் மற்றும் பேருந்துகள் என அனைத்து பிரிவுகளிலும் இதனை ஏற்க நாங்கள் முயற்சிப்போம். நிதி ஆயோக், சாலை போக்குவரத்து அமைச்சகம், மின்துறை அமைச்சகம், கனரகத் தொழில்துறை ஆகியவை ஒன்றுபட்டு மேக் இன் இந்தியாவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிரதமரின் முயற்சிக்கு ஆதரவாக புரட்சியை ஏற்படுத்தும்” என்றார்.

வாகனங்களில் மாற்று எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் பசுமைக் குடில் வாயுக் கசிவுகளை எவ்வாறு குறைக்க முடியும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத் பேசினார். ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மற்றும் எத்தனால் அடிப்படையிலான எரிபொருள் போன்ற மாற்றுத் தொழில்நுட்பங்கள் குறித்தும் பொருளாதாரங்களில் அவற்றின் பயன்பாட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

டி.எம்.இ.ஓ.வின் தலைமை இயக்குனர் மற்றும் நிதி ஆயோக்கின் மின்சார நகர்வுக்கான ஆலோசகர் திரு. அனில் ஸ்ரீவத்சவா மின்சார நகர்வில் உலகளாவிய இடையூறுகள் மற்றும் இந்தத் துறையில் இந்தியாவின் நீண்ட பயணம் குறித்தும் பேசினார்.

இந்த நிகழ்ச்சி ஏ.பி.பி., சார்ஜ்பாயிண்ட் மற்றும் எக்சிகான் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை காட்சிப்படுத்தியதுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த17 வாகனங்களுக்கு சார்ஜிங் செயல்விளக்கத்தையும் காண்பித்தது. ஹீரோ இகோவின் ஃபோட்டான் லித்தியம் பைக்குகள், ஒகிநாவாவின் பிரெய்ஸ் மற்றும் ரிட்ஜ் ஸ்கூட்டர்கள், லோகியாவின் ஓமா ஸ்டார் லி இருசக்கர வாகனங்கள் கம்ஃபர்ட் பிளஸ் இ-ரிக்‌ஷா, ஷிகானின் க்ரீண் ரிக் சூப்பர் (பாசஞ்சர்) மற்றும்கிரீன் கார்ட் (குப்பை லாரி) மேக் இன் இந்தியா கொடியை உயர்த்திப் பிடித்து இந்தியாவில் எதிர்கால துடிப்புமிக்க மின்சார நகர்வுக்கான பாதையை காட்டின. ஹுண்டாயின் லோனிக், மகிந்திராவின் இவெரிட்டோ, நிசானின் லீஃப், இ-டைகர், மேஜிக் இ.வி. ஐரிஸ் இ.வி. மற்றும் டாடா மோட்டார்சின் மின்சார பேருந்து ஆகியவை எதிர்காலத்தில் வரவிருக்கும் முக்கியமான வாகனனங்கள் ஆகும்.

பருவ நிலை மாற்றம் மற்றும் போக்குவரத்து துறை பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை சார்ந்திருக்கும் நிலையின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. உலகில் பல நாடுகள் தங்கள் போக்குவரத்தை மின்மயமாக்க அழைப்பு விடுத்துள்ளன. இந்தியாவில் மின்சார நகர்வு புரட்சி  என்பது எதிர்பார்க்கப்படும் சூழலைச் சரி செய்யும். எனினும் இந்தப் புரட்சி போதுமான அளவுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பு இருப்பதைத் தொடர்ந்து ஏற்படத் தொடங்கி இருக்கிறது. மின்சார நகர்வுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக திகழும் நிதி ஆயோக் இதற்கான இரண்டு மின்சார சார்ஜிங் நிலையங்களை அமைத்து இதற்கு முன்னிலை எடுத்துள்ளது. இந்த சார்ஜிங் வசதிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

*****


(Release ID: 1520793)
Read this release in: English