புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தரவு தேவைகளைச் சமாளிக்க புள்ளியியல் முறையை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.: டி வி சதானந்த கவுடா
நிலைத்த மேம்பாட்டு இலக்குகளின்கீழ், லட்சியம் மற்றும் இலக்குகளுக்கான நிலவர முன்னேற்றத்தை கண்காணிக்கும் அடிப்படை தரவு குறித்த தேசிய அறிக்கை தயாரிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
प्रविष्टि तिथि:
15 FEB 2018 3:45PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா தரவு தேவைகளைச் சமாளிக்க புள்ளியியல் முறையை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ளார். மத்திய இணையமைச்சர் திரு விஜய் கோயலுடன் செய்தியாளர்களிடம் தமது அமைச்சகத்தின் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்துப் பேசிய அவர், நிலைத்த மேம்பாட்டு இலக்குகளின்கீழ், லட்சியம் மற்றும் இலக்குகளுக்கான நிலவர முன்னேற்றத்தை கண்காணிக்கும் அடிப்படை தரவு குறித்த தேசிய அறிக்கை தயாரிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் உருவெடுத்து வரும் சமூக பொருளாதார சூழலின் தரவு தேவைகளை சமாளிக்க, 2018-19 ம் நிதியாண்டில், புள்ளியியல் முறையை மேலும் மேம்படுத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பல்வேறு முயற்கிகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. 2018- 19 மத்திய பட்ஜெட்டில் ரூ.4,859 கோடி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய புள்ளியில் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடு, கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி, கல்வி நடவடிக்கைகளுக்கு மானியங்களையம் அமைச்சகம் வழங்கி வருகிறது. 2018- 19 ல் திறன் மேம்பாட்டுக்கு ரூ.208 கோடியும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 3,950 கோடியும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு ரூ. 269 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை 2016ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அடிப்படை கொள்கைகளின் அதிகாரப்பூர்வ புள்ளியியல் முறையை பின்பற்றியது. இந்த கொள்கைகளுக்கு மேலும் முக்கியம் அளிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ புள்ளியியல் குறித்த தேசிய கொள்கையை அமைச்சகம் வகுத்து வருகிறது. 2018- 19 ல் அதிகாரப்பூர்வ புள்ளியியலுக்கான தேசிய தர உறுதி வரையறையை அமைச்சகம் தயாரிக்கும்.
(रिलीज़ आईडी: 1520698)
आगंतुक पटल : 175